• Jul 26 2025

அசிமை பார்க்க வரும் அரசியல் பிரமுகர்?.. விக்ரமன் கிட்ட ADK சொன்ன வார்த்தையால் ஏற்பட்ட பரபரப்பு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தனர்.

இதற்கு அடுத்தபடியாக, தற்போது பிக் பாஸ் வீட்டில் Freeze டாஸ்க் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த டாஸ்க்கில் மீதமுள்ள 9 போட்டியாளர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

முந்தைய வார டாஸ்க்கிற்கு மத்தியில் குடும்பத்தினர் குறித்து பேசியும், கடிதங்கள் எழுதியும் நிறைய போட்டியாளர்கள் கண் கலங்கி போயிருந்தனர்.

அப்படி ஒரு சூழலில், இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்கின்றனர்.

மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். இது தவிர அமுதவாணன் மனைவி மற்றும் குழந்தைகளும், பின்னர் மணிகண்டா ராஜேஷை பார்க்க அவரது தாய், மனைவி, குழந்தை மற்றும் நடிகையும், சகோதரியுமான ஐஸ்வர்யா ராஜேஷூம் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

எனினும் அதே போல ரச்சிதாவை பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். இதே போல, ஏடிகேவை பார்க்க அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் உள்ளே வந்திருந்தனர். போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தந்த வண்ணம் இருப்பதால், பிக் பாஸ் வீடே தற்போது எமோஷனல் மோடிற்கு மாறி உள்ளது.

இதனைத் தொடர்ந்து, அசிம், விக்ரமன் மற்றும் கதிரவன் உள்ளிட்டோரின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் வருகை தர உள்ளனர். அத்தோடு அப்படி ஒரு சூழலில் தன்னை பார்க்க வரும் நபர்கள் குறித்து அசிம் பேசியதாக ADK குறிப்பிட்டுள்ள விஷயம், பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

ADK, விக்ரமன் மற்றும் மைனா நந்தினி உள்ளிட்டோர் இனிவரவுள்ள குடும்பத்தினர் குறித்து அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அசிம் கூறியதாக பேசும் ADK, "என்னை பார்க்க ஒருத்தரு வருவாருன்னு நினைக்குறேன். வந்தா நல்லா இருக்கும்" என அசிம் தன்னிடம் கூறியதாக குறிப்பிடுகிறார். அதே போல, அரசியல் பிரமுகர் கூட்டம் கூட்டமாக அசிமை பார்க்க வருவதாகவும் விக்ரமனிடம் தெரிவிக்கிறார் ADK.

Advertisement

Advertisement