• Jul 26 2025

அர்னவ்வை செருப்பை கழட்டி அடிக்கனும்-கொந்தளிக்கும் ரசிகர்கள்- திவ்யா ஸ்ரீதர் வெளியிட்ட ஆதாரம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கேளடி கண்மனி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் இந்த சீரியலில் தன்னுடன் நடித்த அர்னவ் என்பவரை 5 வருடமாக காதலித்து திருணம் செய்து கொண்டார். ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை பெற்ற பின்பு தான் அர்னவ்வை இரண்டாவது தடவையாக கல்யாணம் பண்ணிக் கொண்டார்.

திருமணத்திற்கு பின் சில மாதத்திலேயே கர்ப்பமான திவ்யா,கடந்த அக்டோபர் தன்னுடைய கணவர் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாக போலீஸில் புகார் கொடுத்தார்.அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அர்னவ் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் வெளியே வந்தார். இருப்பினும் இருவரும் தற்பொழுது பிரிந்தே வாழ்கின்றனர்.


மேலும் திவ்யா தனியாக இருந்தாலும் தொடர்ந்து சீரியலில் நடித்து வருகின்றார். ஷுட்டிங்கிற்கு தன்னுடைய பிள்ளைகளை அழைதது வரும் புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.மேலும் அண்மையில் அதிநவீன வசதிகள் கொண்ட MG hector sharp cvt என்கிற மாடல் காரை வாங்கியிருந்தார்.


மேலும் நீண்ட நாளைக்கு பிறகு அர்னவ் இலங்கைப் பெண் ஒருவரைக் காதலித்து ஏமாற்றியதாகவும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்தார். இதனை அடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அர்னவ் ரசிகை ஒருவருக்கு ஐ லவ்யூ சொல்லி சஃட் பண்ணியதை பதிவிட்டு அர்னவ்வின் தில்லாலங்டி வேலையை நிரூபித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அர்னவை திட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement