• Jul 24 2025

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றிய ராபர்ட் மாஸ்டர் வீட்டில் நடந்த விஷேச நிகழ்வு- குஷியாகச் சென்ற முக்கிய பிரபலம்-

stella / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தமிழுக்கும் அறிமுகமானது. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் இதனை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 100 நாட்கள் நடக்கும் இப்போட்டியில் அனைத்து கடினமான தருணங்களையும் கடந்து இறுதிவரை பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பவரே டைட்டில் வின்னராவார். 


அந்த வகையில் சில தினங்கள் முன்பு பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் முடிவடைந்தது.இதில் சின்னத்திரை நடிகர் அசீம் டைட்டிலை வென்றார். இதையடுத்து தான் நிகழ்ச்சியில் கூறியது போல் தனது பரிசு தொகையில் பாதியான 25 லட்சத்தை கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விக்கு செலவிடுவதாக அறிவித்துள்ளார்.


இந்த நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை விக்ரமனும் மூன்றாம் இடத்தை ஷிவினும் பெற்றுள்ளனர். மேலும் இதில் அசீம் வெற்றி பெற்றாலும் நேர் மறையான விமர்சனங்களே அதிக அளவில் எழுந்துள்ளன.இது ஒரு புறம் இருக்க இந்த பிக்பாஸ் சீசன் 6இல் பங்கு பற்றிய அனைத் போட்டியாளர்களும் ரசிகர்களுக்கு பரிட்சயம் ஆகி விட்டனர்.


அந்த வகையில் இதில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் ராபர்ட் மாஸ்டர். இவர் இந்த நிகழ்ச்சியில் சீரியல் நடிகை ரச்சிதாவை சைட் அடித்த விடயம் ரசிகர்களை கவர்ந்திருந்தது. இருப்பினும் சரியாக விளையாடாததால் சில நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.


இந்த நிலையில் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் இணைந்து கோலாகலமாகக் கொண்டாடியுள்ளார்.இவரின் இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பிக்பாஸ் ஷெரினாவும் கலந்து கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.




Advertisement

Advertisement