• Jul 24 2025

ரோஜா சீரியல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்- ஜெசிகா என்னும் மற்றுமொரு வேடத்தில் ப்ரியங்கா

stella / 3 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களைக் கவரும் விதமாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. இந்த சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.

அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் பல வருடங்களாக சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் முக்கிய சீரியல் தான் ரோஜா. இந்த சீரியலில் ரோஜா என்னும் கதாப்பாத்திரத்தில் ப்ரியங்காவும் அர்ஜுன் என்னும் கதாப்பாத்திரத்தில் சிப்பு சூர்யனும் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சீரியலில் இருந்து விலகப் போவதாக சிப்பு சூர்யன் தனது சமூக வலைத்தளத்தின் மூலம் தெரிவித்திருந்தார். ஆனால் தற்பொழுது மக்களின் வேண்டுகோளுக்கிணங்க சீரியலில் இருந்து விலகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சீரியலில் ஒரு நிகழ்ந்துள்ளது. அதாவது இந்த சீரியலில் ப்ரியங்கா ஜெசிகா என்னும் ஒரு வேடத்திலும் வரப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்த எப்பிஷோட்டுகளுக்காக காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement