• Jul 24 2025

விஜய் டிவி நடிகர் புகழ் மீது திடீரென பாய்ந்து வந்த புலி… படப்பிடிப்பில் நடந்த ஷாக்கிங் சம்பவம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் புகழ். இவர் இதனைத் தொடர்ந்து குக்வித் கோமாளி என்னும் நிகழ்ச்சியில் பங்கு கொண்டதன் மூலமே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானார்.

இவர் தற்பொழுது இயக்குநர் ஜெ.சுரேஷ் இயக்கத்தில் “மிஸ்டர் ஜூ கீப்பர்” என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தில் புலி பராமரிப்பாளராக புகழ் நடித்து வருகிறார். இயக்குநர் சுரேஷ், இத்திரைப்படத்தில் நிஜ புலியை வைத்து படமாக்க வேண்டும் என முடிவு செய்தார். இந்தியாவில் அதற்கான அனுமதி இல்லை என்பதால் பிலிப்பைன்ஸ் நாட்டில் பயிற்றுவிக்கப்பட்ட புலி ஒன்றை பயன்படுத்தி இத்திரைப்படத்தை எடுத்து முடித்திருக்கின்றனர்.


இந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த ஒரு ஷாக்கிங் சம்பவத்தை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜெ.சுரேஷ் பகிர்ந்துகொண்டுள்ளார்.புகழ் புலியை குளிப்பாட்டுவது போன்ற ஒரு காட்சியை படக்குழுவினர் படமாக்கிக்கொண்டிருந்தபோது, அத்திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த நடிகை கையில் வைத்திருந்த ஸ்ப்ரே ஒன்றை புலியின் முகத்தில் அடித்துவிட்டாராம். அது புலிக்கு எரிச்சலையூட்ட அப்புலி, தன்னை குளிப்பாட்டிக்கொண்டிருந்த புகழின் மேல் பாயப்போனதாம்.

தன் மேல் பாய வந்த புலியை பார்த்து பயந்துபோன புகழ், பின்னால் இருந்த வாட்டர் டேங்குக்குள் கவிழ்ந்து விழுந்துவிட்டாராம். புலியை செயின் போட்டு கட்டிப்போட்டிருந்ததால் புகழ் தப்பித்தாராம். இல்லை என்றால் அன்று நடந்திருப்பதே வேறு என்று அப்பேட்டியில் ஜெ.சுரேஷ் அச்சம்பவத்தை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement