• Jul 25 2025

ஆர்யாவிற்கு சர்ப்பிரைஸ் கொடுத்த சாயிஷா... நினைவுகள் மூலமான வாழ்த்து மழை.. வைரலாகும் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் பிரபல இயக்குநர்களில் ஒருவரான ஏ.எல்.விஜய் இயக்கிய 'வனமகன்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாயிஷா. இவர் சினிமாவில் நுழைந்து மிக குறுகிய நாட்களிலேயே, தன்னுடைய நடிப்பாலும், அழகாலும், மற்றும் நடன அசைவுகளாலும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தார்.


மேலும் 'வனமகன்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, நடிகர் கார்த்திக்கு ஜோடியாக 'கடைக்குட்டிசிங்கம்', விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 'ஜூங்கா', சூர்யாவுக்கு ஜோடியாக  'காப்பான்', என தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலருக்கு ஜோடியாக அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது

அத்தோடு ஆர்யாவுடன் இணைந்து 'கஜினிகாந்த்' படத்தில் நடித்த போது, ஆர்யா - சாயிஷா இடையே காதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள்.

மேலும் இவர்களுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்தது. தங்களுடைய மகளுக்கு Ariana என பெயர் சூட்டியுள்ளனர்.


இந்நிலையில் ஆர்யா இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். அதற்கு சர்ப்பிரைஸ் கொடுக்கும் வகையில் சாயிஷா வீடியோ ஒன்றினைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அதில் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்திருந்த தருணங்கள் அனைத்தும் பதிவாகி இருக்கின்றன. இதனைப் பார்த்த ரசிகர்கள் அந்த வீடியோவை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.


Advertisement

Advertisement