• Jul 26 2025

மணிகண்டனை நினைத்து உருகி அவரது மனைவி வெளியிட்ட வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6 இல் இதில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருபவர் தான் மணிகண்டன்.இவர் தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் கதாநாயகிகளில் ஒருவராகத் திகழ்ந்து வருகின்ற ஐஸ்வர்யா ராஜேஷ் இன் உடைய சகோதரர் தான் இந்த மணிகண்டன். 

தங்கை ஐஸ்வர்யாவிற்கு சினிமாவில் நுழைய வேண்டும் என்ற ஆசை இருந்தமையால் வாய்ப்பு தேடி சுமார் 5 வருடங்கள் தங்கைக்காக அலைந்தாராம். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் 'அவள்' என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கினாராம்.


இதனைத் தொடர்ந்து சீசன் நம்பர் 4 ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு தான் தன்னுடைய காதல் மனைவி சோபியாவை சந்தித்து கல்யாணம் பண்ணிக் கொண்டார். 

தனது மனைவிக்கு 20வயது இருக்கும் போதே இவர் அவரை திருமணம் செய்து 21 வயதில் குழந்தை பெற்றுக் கொண்டார்.இந்நிலையில் தனது காதல் கணவனை நினைத்து  6வருட வாழ்க்கையை எப்படி வாழ்ந்துள்ளார் என வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.இதோ அந்த வீடியோ...



Advertisement

Advertisement