• Jul 24 2025

முதன் முறையாக சரிகமப நிகழ்ச்சிக்கு வந்த மலையகக் குயில் அசானியின் அம்மா- ராகவா லாரன்ஸ் கொடுத்த வாக்கு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சியான ஷு தமிழில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் சரிகமப லிட்டில சாம்ஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் அசானி, கில்மிசா என்னும் இரு போட்டியாளர்கள் பங்குபற்றி பாடி வருகின்றனர்.

இந்த நிலையில் மலையக குயிலான அசானியின் அம்மா இந்த வாரம் தன்னுடைய மகளைப் பார்ப்பதற்காக இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்றார். கிட்டத்தட்ட 100 நாட்கள் கழித்து தன்னுடைய மகளைக் கண்டதால் கட்டிப்பிடித்து அழுகின்றார்.


பின்னர் அசானியை நல்லபடியாக பார்த்துக் கொள்வதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்தோடு அர்ச்சனாவையும் கட்டிப்பிடித்து அழுகின்றார்.தொடர்ந்து அசானியைப் பார்த்துக் கொள்ளும் அவரது நண்பி மற்றும் அவருடைய அம்மாவுக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றார்.


எனவே இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு வீரந்தினராக வந்த ராகவா லாரன்ஸ் அசானிக்கு தன்னால் முடிந்த உதவியை செய்யத் தயாராக இருப்பதாகவும் மலையக மக்களுக்கும் தேவை ஏதும் ஏற்படின் அவர்களுக்கும் உதவி செய்ய தயாராக இருப்பதாகக் கூறுகின்றார்.இதைக் கேட்டு எல்லோருமே சந்தோசத்தில் உறைந்து நிற்கின்றனர்.இது பார்வையாளர்களையே கண்கலங்கச் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement