• Jul 24 2025

சூர்யாவிடம் வசமாக சிக்கப் போகும் ஐஸ்வர்யா... கௌதமின் சுய ரூபத்தை நிரூபிக்க மகா எடுத்த புது முயற்சி.. விறுவிறுப்பான 'ஆஹா கல்யாணம்' ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.00 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் ஆஹா கல்யாணம். இந்த சீரியலில் அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளையை தங்கச்சி கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்து கொள்கின்றார். இவ்வாறு வசதியான இடத்தில் அவர் திருமணம் செய்து கொள்வதால் மாப்பிள்ளை வீட்டில் அந்தப் பெண் என்னெனன்ன கஷ்டங்களை அனுபவிக்கின்றார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் ஐஸ்வர்யா கௌதமுக்கு போன் பண்ணி "எல்லாருமே கோயில்ல தான் இருக்காங்க, நான் கிளம்பி அங்க வாறேன்" எனக் கூறுகின்றார்.


இதனையடுத்து ஐஸ்வர்யாவும் கௌதமும் களவாக சந்தித்து ரொமான்ஸ் பண்ணுவதை பார்த்த பிரபா மகாவுக்கு போன் பண்ணி சொல்கின்றார். இதனை சூர்யாவிடம் சொன்ன மகா சூர்யாவையும் அழைத்துக் கொண்டு கௌதம், ஐஸ்வர்யா இருக்கும் இடத்திற்கு விரைகின்றார்.


இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement