• Jul 25 2025

வருங்கால மனைவிக்கு ரொமான்டிக்கான புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்துக் கூறிய அமீர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 5இல் கலந்து கொண்டதன் மூலம் காதல் ஜோடியாக மாறியவர்கள் தான் அமீர் மற்றும் பாவ்னி. இதில் அமீர் பல நடன நிகழ்ச்சிகளில் பங்குபற்றியிருக்கின்றார்.அதே போல பாவனி சின்னத்தம்பி மற்றும் ராசாத்தி போன்ற சீரியல்களில் நடித்து மிகவும் பிரபல்யமானவர் எனலாம்.


மேலும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பாவனி ஆரம்பத்தில் இருந்தே கலந்து கொண்டு சிறப்பித்தார். ஆனால் வைல்ட் காட் என்ட்ரியாகவே அமீர் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து இருவரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனம் ஆடி காதலர்களாக மாறினார்கள்.


 அத்தோடு இவர்களது திருமணம் அடுத்த வருடம் நடக்கும் என பாவனி ஒரு இன்டர்வியூவில் தெரிவித்திருந்தனர். காதலிக்க ஆரம்பித்த பிறகு புதிய கார் வாங்குவது, அஜித்தின் துணிவு படத்தில் கமிட்டாகி நடித்தது என முன்னேறி வருகிறார்கள்.


இந்த நிலையில் இன்று நடிகை பாவ்னிக்கு பிறந்தநாள், என்பதால் அமீர் ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement