• Jul 23 2025

ப்ரியங்காவை வைத்து அமீர் செய்த வேலை- பயந்து போய் ஓடி வந்த பாவனி- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளுக்கும் தொகுப்பாளர் பிரியங்கா தான். இவரது கலகலப்பான பேச்சால் ரசிகர்களை வசிகரித்து வந்துள்ளார். சூப்பர் சிங்கர்ஸ் ஸ்டார் மியூசிக் ஒல்லி பெல்லி, பிக் பாஸ் ஜோடிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்தாண்டு நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளர்களாக பங்கேற்று சிறப்பாக விளையாடியிருந்தார். 

எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும் பிரியங்காவின் கோபத்தை பிக் பாஸில் தான் பார்க்க முடிந்தது. அவ்வப்போது தாமரை செல்வி உடன் சண்டை, நிரூப்புடன் மோதல் என பல்வேறு சர்ச்சைகளை சிக்கியிருந்த போதிலும் இறுதிப்போட்டி வரை முன்னேறினார். ஆனால் டைட்டில் ஜெயிக்கும் வாய்ப்பை இழந்த இவர்   மீண்டும் தனது பழைய பணிக்கே திரும்பி விட்டார்.

மேலும் பிக்பாஸின் மூலம் தான் அமீர் பற்றும் பாவனி நிரூப்  என நண்பர்களையும் சேர்த்துக் கொண்டார்.அடிக்கடி நண்பர்களுடன் வெளியில் செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளார்.


இப்படியான நிலையில் ப்ரியங்காவை துாக்கி அமீர் சுற்றும் வீடியோவைப் பிரியங்கா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு அக்கா தம்பி போன்ட் என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement