• Jul 24 2025

உயிருக்குப் போராடும் ஆர்த்தியின் தந்தை... கடுப்பாகி எழில் சொன்ன வார்த்தை... கோபத்தில் சாபமிட்ட வடிவு.. பரபரப்பான திருப்பங்களுடன் 'Kayal' serial..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்று 'கயல்'. இந்த சீரியலானது டிஆர்பி ரேட்டிங்கில் முதன்மையான ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பது குறித்து அறியப் பலரும் ஆவலாக உள்ளனர்.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் கயலின் பெரியப்பா தர்மலிங்கம் சுயநினைவின்றி மயக்கமுற்று கிடக்கின்றார். அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து வடிவு "கடவுளே என் புருஷனைக் காப்பாற்று" எனக் கூறி அழுது கண்ணீர் வடிக்கின்றார்.


அதற்கு எழில் கொஞ்சம் வாயை மூடிற்று அமைதியாக இருக்குமாறு கூறுகின்றார். பதிலுக்கு வடிவு "நீயும் கயலும் சேர்ந்து தானே என் பொண்ணு வாழ்க்கையை நாசம் ஆக்கினீங்க, அதுமட்டுமில்லாமல் இப்ப மிரட்டுறியா" எனக் கேட்டுக் கத்துகின்றார்.


மேலும் வடிவு கயலைப் பார்த்து எல்லாமே நீயும் இவனும் சேர்ந்து போட்ட பிளான் தானே உங்கள கதற விடுறண்டி எனக் கூறி சாபமிடுகின்றார். இதனையடுத்து இனி என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 


Advertisement

Advertisement