• Jul 25 2025

'எதிர்நீச்சல்' சீரியலிருந்து விலக முடிவெடுத்த ஆதிரை... காரணம் அறிந்து ஷாக்கான ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக 'எதிர்நீச்சல்' மாறியுள்ளது. இந்த சீரியலில் தற்போது ஆதிரைக்கு சமீபத்தில் கரிகாலனுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. அதுமட்டுமல்லாது அப்பத்தாவின் 40% ஷேர் யாருக்கு என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 


அந்தவகையில் இதில் பலரிற்கும் பிடித்த கதாபாத்திரங்களில் ஒன்றாக ஆதிரையின் கதாபாத்திரம் மாறியுள்ளது. அதாவது முதலில் நெகட்டிவ் ரோலில் நடித்து வந்த இவரின் கதாபாத்திரம் தற்போது பாசிட்டிவ்வாக மாற்றப்பட்டு ரசிகர்களிடையே சிறந்த வரவேற்புப் பெற்று வருகிறது. 

ஆனால் முதலில் ஆதிரையின் கல்யாண கான்செப்ட் ஆரம்பித்ததில் இருந்து இந்த சீரியல் பயங்கரமாக போரடிக்க தொடங்கி விட்டதாக தொடர்ந்து ரசிகர்களிடமிருந்து கமெண்ட் குவிந்து வந்தது. இதன் காரணமாக சீரியல் இருந்து விலக முடிவு எடுத்ததாக ஆதிரை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக அவர் பேசுகையில் "முதலில் என்னுடைய கேரக்டர் நெகட்டிவாக இருந்தது அப்போது கூட நான் பெரிதாக கவலைப்படவில்லை. பாசிட்டிவாக மாறிய பிறகு நிறைய பாராட்டுக்கள் எனக்கு கிடைத்தது. ஆனால் கல்யாணம் கான்செப்ட் தொடங்கியது எல்லோரும் போரடிக்கிறது என சொல்ல தொடங்கியதால் இந்த சீரியலில் இருந்து விலகி விடலாம் என்று நான் முடிவெடுத்தேன். இருப்பினும் செட்டில் இருந்தவர்கள் அனைவரும் எனக்கு அட்வைஸ் செய்தார்கள்" எனக் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது "கல்யாண நாள் எபிசோட் டிஆர்பி-யில் சாதனை படைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement