• Jul 26 2025

அபி, சுடருடன் இணைந்து பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய வெற்றி... அடடே எல்லாரும் ஒண்ணு சேர்ந்திட்டாங்களே... வைரல் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும். இதில் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக வினோத் பாபு மற்றும் பவித்ரா ஆகியோர் நடித்து வருகின்றனர்.


வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நகரும் இந்த சீரியலில் எப்போது அபிக்கு வெற்றி கொலைகாரன் இல்லை என்ற உண்மை தெரிய வரும் , அபி சுடர் தான் பெற்ற குழந்தை தான் என்று எப்போது சொல்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.


இந்நிலையில் நேற்றைய தினம் வினோத் பாபு 'தென்றல் வந்து என்னைத் தொடும்' சீரியல் குழுவினருடன் இணைந்து தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். இதில் அபி, சுடர் உட்பட சீரியலில் நடிக்கும் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்த வீடியோ ஆனது தற்போது வெளியாகியுள்ளது. வெற்றிக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

https://www.instagram.com/reel/CtbvvYWRJJL/?utm_source=ig_web_copy_link

Advertisement

Advertisement