• Jul 25 2025

காஞ்சனா படத்தில் நடித்ததுதான் நான் செய்த தவறு- கவலை தெரிவித்த திருநங்கை பிரியா- என்ன காரணம் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நடிகர்களில் உருவர் தான் ராகவா லாரன்ஸ். இவரே இயக்கி நடித்த திரைப்படம் தான் காஞ்சனா.இது வழக்கமான பேய் படம் போல் இல்லாமல் குழந்தைகளை குஷிப்படுத்தும் பேய் படம் போல இருந்ததால் இப்படம் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.இப்படத்தின் இரண்டாம் மூன்றாம் பாகங்களும் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.

காஞ்சனா படத்தின் முதல் பாகத்தில் திருநங்கை படும் கஷ்டத்தையும், அவர்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் வாழ்க்கையில் முன்னேறுவார்கள் என்ற ஒரு நல்ல கருத்து சொல்லப்பட்டு இருந்தது. இந்த கதைக்கு வலு சேர்க்கும் வகையில் நடிகர் சரத்குமார் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு மகள் கதாபாத்திரத்தில் திருநங்கை பிரியா நடித்திருந்தார்.


இந்நிலையில், திருநங்கை பிரியா யூடியூப் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி கொடுத்துள்ளார். அதில்,காஞ்சனா படத்தில் நடித்தது தான் என் வாழ்வில் நான் செய்த மிகப்பெரும் தவறு. காஞ்சனா படத்திற்கு முன் ஒரு நார்மலான திருநங்கை வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டு இருந்தேன். காஞ்சனா படத்தில் நடித்ததால் கோடி கோடியாக நான் பணம் சம்பாதித்துவிட்டேன் என்று நினைக்கிறார்கள்.

ஆனால், இப்படத்திற்கு பின்பு எனக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. வேறு வேலை எதுவும் பார்க்கவும் முடியவில்லை. நம்மை ஏற்றிவிட சிலர் பேர் இருந்தாலும், கையை பிடித்து இழுத்துவிட சிலர் இருக்கிறார்கள் என்ற திருநங்கை பிரியா கண்ணீருடன் வாழ்க்கையில் படும் கஷ்டம் குறித்து பேசி உள்ளார்.


நடிகர் ராகவா லாரன்ஸ தற்போது பி வாசு இயக்கி வரும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து படத்தின் போஸ்ட் ப்ரோடக்சன் பணி நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement