• Jul 24 2025

மகள்களை அமரவைத்து மாட்டு வண்டி ஓட்டிய ஆக்‌ஷன் கிங் அர்ஜூன்..தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்  திரையுலகில்  90களில் தொடங்கி இன்றுவரை பல திரைப்படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும், குணச்சித்திர கதபாத்திரத்திரங்களிலும் நடித்து வந்தவர் நடிகர் அர்ஜூன்.

அத்தோடு பல திரைப்படங்களை இயக்கியும் நடித்திருக்கும், நடிகர் அர்ஜூன், பொதுவாகவே ஆக்சன் படங்களில் நடித்து ரசிகர்களை வசீகரிப்பதில் பெயர் போனவர். இதனாலேயே நடிகர் அர்ஜூன், ஆக்ஷன் கிங் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். அவருக்கு இரண்டு மகள்கள். முதல் மகள் ஐஸ்வர்யா திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இதேபோல், அர்ஜூனின் இரண்டாவது மகளான அஞ்சனா அர்ஜூன், உண்ணும் பழங்களின் தோல்களை  கொண்டு ஹேன்ட்   பேக்குகளை உருவாக்கி இருக்கிறார். அத்தோடு உலகத்திலேயே இப்படி செய்வது இதுதான் முதல் முறை என்று கூறப்படும் நிலையில், இத்தகைய பெருமைக்குரிய சிறப்பால் அஞ்சனா அர்ஜூன் பலரது பாராட்டுகளை பெற்று வருகிறார்.


இந்நிலையில்தான் மகள்களை மாட்டு வண்டியில் வைத்துக்கொண்டு நடிகர் அர்ஜூன் ரெய்டு போகும் வீடியோவை அர்ஜூனின் மகள், நடிகை ஐஸ்வர்யா அர்ஜூன் தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதேபோல் அனைவரும் குடும்பமாக அவுட்டிங் சென்றுவந்த புகைப்படங்களை நடிகை ஐஸ்வர்யா அர்ஜூன் பதிவிட்டுள்ளார்.

நடிகர் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், தற்போது விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  




Advertisement

Advertisement