• Jul 25 2025

அதிரடி காதல் திரைப்படம் 'ஜெமினி' வெளியாகி.. இன்றுடன் 21ஆண்டுகள் நிறைவு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

2002-ஆம் ஆண்டு இயக்குநர் சரண் இயக்கத்தில் விக்ரம், கிரண், கலாபவன் மணி மற்றும் பலர் நடித்த அதிரடி காதல் திரைப்படம் தான் 'ஜெமினி'. இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் பரத்வாஜ் என்பவர் இசையமைத்துள்ளார்


மேலும் சரண் இயக்கிய படங்களில் ஜெமினி படம் முக்கியமானது. பக்கா கமர்ஷியல் பேக்கேஜாக உருவாகியிருக்கும் அந்தப் படத்தை ரசிகர்கள் இப்போது பார்த்தாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்கும். சினிமா என்றால் ஒரு நல்லவன், ஒரு கெட்டவன் என்று இருந்த விதியை உடைத்து இரண்டு பேருமே கெட்டவர்களாக இருந்தால் எப்படி இருக்கும் என்ற லைனை பிடித்து அதனை படமாக்கி சாதனை படைத்திருக்கின்றார் சரண். 


இத்திரைப்படம் ஆனது இயக்குநருக்கு மட்டுமன்றி ஹீரோ, வில்லன் என அனைவருக்குமே அப்படம் மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படி பல சிறப்புகளை கொண்ட ஜெமினி திரைப்படம் வெளியாகி இன்றோடு 21 வருடங்கள் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement