• Jul 25 2025

ராஜா ராணி சீரியலில் அதிரடி திருப்பம்; மீண்டும் விலகிய சந்தியா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ராஜா ராணி சீசன் 2. திருமணத்திற்குப் பிறகு பெண்கள் தமது கனவுகளை நிறைவேற்ற எப்படிப் போராடுகின்றார்கள் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது. இதனால் இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது.

மேலும் இந்த சீரியலில் கதாநாயகனாக சித்து நடித்து வருகின்றார். அதே போல ஆரம்பத்தில் கதாநாயகியாக ஆல்யா மானசா நடித்து வந்தார். இருப்பினும் குழந்தை பிறந்த காரணத்தினால் சீரியலில் இருந்து விலகினார். இதனை அடுத்து சந்தியாவாக ரியா என்பவர் நடித்து வருகின்றார்.


மாடலிங் துறையைச் சேர்ந்த இவர் ராஜா ராணி சீரியல் மூலமே முதலில் சின்னத்திரையில் கால் பதித்தார். ஆரம்பத்தில் இவருடைய நடிப்பை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் காலப்போக்கில் சந்தியாவாக ஏற்றுக் கொண்டனர்.அத்தோடு சந்தியா தற்பொழுது பல தடைகளைத் தாண்டி போலீஸாகவும் பதவியேற்றுவிட்டார்.


இப்படியான ஒரு நிலையில் தற்பொழுது ரியா இனிமேல் ராஜா ராணி சீரியலில் சந்தியாவாக நடிக்கப் போவதில்லை என்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.ஏன் சீரியலில் இருந்து விலகினார் என்பது தெரியவில்லை. இருப்பினும் ஒரு வருட காலமாக தனக்கு ஆதரவு தந்த மக்களுக்கு ரொம்ப நன்றி என்றும் அதில் தெரிவித்துள்ளார்.இதனால் அடுத்து சந்தியாவாக யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement