• Jul 24 2025

சாப்பிடக் கூட முடியாமல் தவித்த நடிகர் அமீர்கான் மகள்... இவருக்கு இப்படி ஒரு சோகமா... நடந்தது என்ன..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் அமீர்கான். இவரிற்கும் இவரின் முன்னாள் மனைவி ஆகிய ரீனா தத்தாவுக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதாவது மகன் ஜுனைத் கான் , மகள் ஐரா கான் ஆகிய இருவரும் தான்.

இவ்வாறாக 2குழந்தைகளுக்குத் தந்தையான அமீர்கான் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு பின்னர் கிரண் ராவை திருமணம் செய்தவர், ஆனால் தற்போது அவரையும் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.


இந்நிலையில் இவரின் மகள் ஆகிய ஐரா கான் பெற்றோரின் விவாகரத்துக்குப் பிறகு கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு அதற்கு மருத்துவ சிகிச்சையும் எடுத்திருக்கின்றார். இதுகுறித்து அவர் பேசுகையில் "நான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். காரணமில்லாமல் அழுகை வரும், எப்போதும் சோகமாகவே இருப்பேன். உணவு சாப்பிடக்கூட என்னால் முடியாது" என்றார்.


மேலும் "ஒருமுறை தொடர்ந்து நான்கு நாள்கள்கூட உணவு உண்ணாமல் இருந்திருக்கிறேன். எப்போதும் தாழ்வு மனப்பான்மையிலேயே இருந்தேன். இந்தப் பிரச்னை எனக்கு மட்டுமல்ல என் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்குமே இருந்துள்ளது. அதாவது என் தாய், தந்தையின் விவாகரத்துக்கு முன்பே ஏதோ பிரச்னை இருப்பதாக உணர்ந்தேன். இருவரின் சம்மதத்துடன் அவர்கள் இருவரும் நட்புடன்தான் பிரிந்தார்கள். ஆனாலும் இது எனக்கு மனத்தளவில் மிகவும் பாதித்தது" என்றார்.


அதுமட்டுமல்லாது "என் மன அழுத்தத்துடன் இதுவும் சேர்ந்ததால் மன அழுத்தத்தின் உச்சத்தில் நான் இருந்தேன். பின்னர் முறையான மருத்துவ சிகிச்சைக்கு பிறகே அதிலிருந்து நான் மீண்டு வெளியேறினேன். ஆனால் நான் இப்போது நலமாக இருப்பதாக உணர்ந்தாலும் 8 முதல் 10 மாதங்களுக்கு ஒரு முறை அவ்வபோது மனச்சோர்வு ஏற்படுகிறது. அப்போது அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்கிறேன்" எனவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து ஐரா தற்போது ஓர் அறக்கட்டளையை நிறுவி அதன் மூலமாக மனநலம் தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்படுபவர்களை மீட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement