• Jul 25 2025

விஜய் டிவியின் முக்கிய ரியாலிட்ரி ஷோவில் என்ட்ரி கொடுக்கவுள்ள நடிகர் அப்பாஸ்- அடடே இந்த நிகழ்ச்சிக்கா வருகின்றார்?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சி குழந்தைகளுக்காகவும் சூப்பர் சிங்கர் ஜுனியர் என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது.

குட்டீஸ்களின் இனிமையான குரலில், சூப்பர் ஹிட் பாடல்களை கேட்ட அதிகமானவர்கள் ஆர்வம் காட்டுவதால் இந்த நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு வாரமும் ஃபேன்ஸ் பேஸ் அதிகரித்துக் கொண்டே வருகிறது.


அனிருத் உள்ளிட்ட பல திறமைசாலிகளை தமிழ் சினிமாவிற்கு தந்த சூப்பர் நிகழ்ச்சியின் மற்றொரு பகுதியான சூப்பர் சிங்கர் ஜுனியர்ஸ் நிகழ்ச்சியின் சீசன் 9 அண்மையில் தான் ஆரம்பிக்கப்பட்டது.இந்த சீசனின் நடுவர்களாக சித்ரா, பாடகர் அந்தோணி தாசனுடன் இசையமைப்பாளர் தமன் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.


இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் கெஸ்ட் வருவது வழமையே. அந்த வகையில் தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அடுத்த வாரம் கெஸ்டாக நடிகர் அப்பாஸ் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் படவாய்ப்பில்லாததால் வெளிநாட்டில் வசித்து வரும் அப்பாஸ் சின்னத்திரை மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுப்பது ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement