• Sep 09 2025

உடல் எடையைக் குறைத்து செம ஃபிட்டாக இருக்கும் நடிகர் ajith- வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தாண்டு தொடக்கத்தில் வெளியானது. இந்தப்படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் விக்னேஷ் சிவன், படத்திலிருந்து விலக்கப்பட்டார். 

இதையடுத்து அஜித்தின் அடுத்த படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரபூர்வமாக அறிவித்தது. ‘விடாமுயற்சி’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதால் அஜித் மீண்டும் வெளிநாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற் கொள்ளக் கிளம்பி விட்டார்.


இந்த மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கி ஒரே கட்டமாக 100 நாட்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் விடாமுயற்சி படத்திற்கான மற்ற நடிகர் மற்றும் நடிகைகளை படக்குழு தேர்வு செய்வதில் மும்மரம் காட்டி வருகிறது. 


 விடாமுயற்சி படத்திலும் பிட்டாக காண்பிக்க வேண்டும் என்பதற்காக அஜித் உடல் எடையை குறைத்து வருகிறார்.அந்த வகையில் இன்று அஜித்தின் புகைப்படம் வெளியாகி ரசிகரின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதாவது  தனது ரசிகர்களுடன் அஜித் இந்த புகைப்படத்தை எடுத்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement