• Jul 25 2025

எனது படத்தின் தோல்விக்கு நானே காரணம்...மனம் திறந்தார் நடிகர் அக்‌ஷய் குமார்...

ammu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் அக்‌ஷய் குமார் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். அவர் 90க்கும் மேற்பட்ட இந்தித் திரைப்படங்களில் தோன்றியுள்ளார். இவர் அதிரடி படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். பிறகு நகைச்சுவை படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.


இவர் சமீபத்தில் நடித்து, போன வாரம் வெளியான selfiee திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை, ரசிகர்களின் மனதை கவரவில்லை. 


இவரது படங்கள் கொஞ்ச காலமாகவே தொடர்ந்து பிளாப் ஆகி வருகிறது. இதனால் இவர் மனம் வருந்தினார். மேலும் தனது படங்களின் தோல்வி குறித்து இவர் இவ்வாறு பேசி இருந்தார் "எனது படங்கள் தோல்வி அடைந்ததற்கு நானே காரணம்".


ஒரு திரைப்படம் சரியாக ஓடவில்லை என்றால், அது முழுக்க முழுக்க என்னுடைய தவறுதான், அதற்கு ரசிகர்களை குறை சொல்லக் கூடாது. இக்காலகட்டத்தில் ரசிகர்கள் மாறி விட்டனர், ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் வேற அளவில் இருக்கிறது.


அதை புரிந்து அந்த மாதிரி படம் எடுக்க வேண்டியது கலைஞர்களின் பொறுப்பாகிறது. கலைஞர்கள் அதற்கு தகுந்தவாறு தங்களை மாற்றி கொள்ள வேண்டும். என்னுடைய படம் ஓடாததற்கு நானே காரணம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.


Advertisement

Advertisement