• Jul 25 2025

நடிகர் அதர்வாவிற்கும் காதல் தோல்வி-முதன் முதலில் ரசிகர்களுக்கு தெரியவந்த உண்மை

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் பிரபல்யமான நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் முரளி. இவர் பூவிலங்கு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியாகிய பூ வாசம், இதயம், ஆனந்தம், பாச கிளிகள் போன்ற இன்னும் பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன.

இவ்வாறு தமிழில் உச்சந் தொட்ட நடிகராக இருந்த இவரின் மகன் தான் நடிகர் அதர்வா.இவர்  சினிமாவில் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்படும் நடிகர்களில் ஒருவர் அதர்வா.


இவ்வாறுஇருக்கையில் இவர் நடிப்பில் நேற்று பட்டத்து அரசன் திரைப்படம் வெளிவந்து ஓரளவு நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று வருகிறது.

மேலும்  இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக அண்மையில் தனது ரசிகர்கள் அனைவரையும் சந்தித்து பேசிய அதர்வா பல சுவாரஸ்யமான விஷயங்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

அப்போது ரசிகர் ஒருவர் அதர்வாவிடம் உங்களுக்கு காதல் தோல்வி ஏற்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பி இருந்தார்.


இதற்கு பதிலளித்த அதர்வா ' கண்டிப்பாக காதல் அனுபவங்கள் எனக்கு இருக்கு. ஆனால், அதெல்லாம் அனைவரின் வாழ்க்கையிலும் வருவதுபோல் சகஜமான ஒன்று தான். பெரிய அனுபவங்கள் எதுவும் இதுவரை எனக்கு இல்லை ' என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement