• Jul 24 2025

2ஆவது கணவரையும் பிரிந்தார் நடிகர் பாலாவின் முதல் மனைவி... நடந்தது என்ன..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற ஒரு நடிகர் தான் பாலா. இவர் பிரபல இயக்குநரான சிறுத்தை சிவாவின் தம்பி என்பது நம் அனைவருக்கும் தெரியும். மேலும் தமிழில் 2003 இல் வெளியான 'அன்பு' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து 'காதல் கிசு கிசு, கலிங்கா, அம்மா அப்பா செல்லம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக அஜித்தின் வீரம், ரஜினியின் அண்ணாத்த ஆகிய படங்களில் இவரின் நடிப்பு இன்றும் நம்மால் மறக்க முடியாது.


நடிகர் பாலா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கல்லீரல் பாதிப்பு காரணமாக கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது நலமாக இருந்து வருகின்றார்.


இவரின் முதல் மனைவி தான் அம்ருதா சுரேஷ். இவர் 2019-ஆம் ஆண்டு சட்டப்படி பாலாவிடம் விவாகரத்து பிரிந்து கொண்டார். இதனையடுத்து பாலா எலிசபெத் எனும் டாக்டரை திருமணம் செய்துக் கொண்டார். அதேபோல் அம்ருதா கடந்தாண்டு இசையமைப்பாளர் கோபி சுந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து கடந்த மே மாதம் முதலாம் ஆண்டு திருமண நாளை இருவரும் கோலாகலமாக கொண்டாடி இருந்தனர்.


இந்நிலையில் தற்போது அம்ருதா கோபி சுந்தரையும் விவாகரத்து செய்யவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது இவர்கள் இருவரும் முட்டி மோதிக் கொண்டதாகவும் இதனால் சமூக வலைத்தளங்களில் இருந்து கோபி சுந்தரின் போட்டோக்களை பாடகி அம்ருதா சுரேஷ் அதிரடியாக நீக்கியதாகவும் கூறப்படுகின்றது. இது எந்தளவிற்கு உண்மையானது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement