• Jul 26 2025

திடீரென தனது வீட்டில் பிரபல நடிகர் தற்கொலை! பரபரப்புடன் வெளியான தகவல்...!அதிர்ச்சியில் திரையுலகம்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல கன்னட நடிகர் சம்பத் ஜெ ராம் நேற்று பெங்களூரில் Nelamangala பகுதியில் இருக்கும் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு 35 வயது மட்டுமே ஆகிறது.

கன்னட சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து இருக்கும் அவர் திடீரென இந்த விபரீத முடிவு எடுத்திருப்பது கன்னட ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

சம்பத் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் தான் Shri Balaji Photo Studio என்ற கன்னட படம் திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.சம்பத் தனக்கு சமீப காலமாக நடிக்க வாய்ப்புகள் வருவத்தில்லை என மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த வருடம் தான் அவருக்கு திருமணமும் நடைபெற்று இருக்கிறது.

அவரது தற்கொலைக்கு காரணம் என்ன என தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பத்தின் இறுதி சடங்குகள் இன்று அவரது சொந்த ஊரில் நடைபெற இருக்கிறது.

சம்பத் தற்கொலை பற்றி Shri Balaji Photo Studio படத்தின் இயக்குநர் உருக்கமாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். 


Advertisement

Advertisement