தமிழ் மற்றும் மலையாளம் இரு மொழிகளிலும் பிரபலமான நடிகராக திகழ்பவர் தான் கின்னஸ் பக்ரு. இவர் தமிழில் வெளிவந்த டிஷும், காவலன், 7ஆம் அறிவு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
ஆனால், மலையாளத்தில் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரின் நடிப்பிற்கு என்று தனிரசிகர் பட்டாளமே உள்ளது.
அத்தோடு இவர் கடந்த 2006ஆம் ஆண்டு காயத்ரி மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தீப்தா கீர்த்தி என ஒரு மகள் இருந்த நிலையில் சமீபத்தில் இவரின் மனைவி இரண்டாவது முறை கர்ப்மாகி மீண்டும் ஒரு குழந்தையை பெற்றெடுத்தார்.
அதனை தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு இருந்த நிலையில் அதிக வாழ்த்துகளும் லைக்ஸ்களும் கிடைத்து இருந்தது.இந்நிலையில் திடீரென இவரின் மூத்த மகளின் புகைப்படம் இணைத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
அதாவது ஹீரோயின் ரேஞ்சிற்கு அவரது மகள் அவரை விட நன்றாக வளர்ந்து போஸ் கொடுத்துள்ளார்.
Listen News!