• Jul 26 2025

மனைவியுடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த நடிகர் ஜெயராம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகின் பிரபல முன்னணி நடிகரான ஜெயராம், தமிழில் பல படங்களில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர். அந்தவகையில் தற்போது ஜெயராம் நடிப்பில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 2' படமும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்க கூடிய படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. 


அந்தவகையில் 'பொன்னியின் செல்வன்' கதையில் வரும், ஆழ்வார்கடியான் கதாபாத்திரத்தில் ஜெயராம் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரம் நந்தினியின் சகோதரர் கதாபாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தில், ஜெயராம் மற்றும் கார்த்தியின் காம்பினேஷன் சீன்கள் பலவும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. 


எனவே இரண்டாம் பாகத்திலும் இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்க கூடிய ஒன்றாக உள்ளது. அந்தவகையில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் வெளியாக இன்னும், 10 நாட்களே உள்ள நிலையில், படம் வெற்றிபெறவும், சித்திரை மாதத்தை முன்னிட்டும் நடிகர் ஜெயராம் தன்னுடைய மனைவி பார்வதியுடன் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement