• Jul 26 2025

நடிகர் ஜானி டெப் விவாகரத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்- மனைவி ஆம்பர் ஹெர்ட் எடுத்த முக்கிய முடிவு

stella / 2 years ago

Advertisement

Listen News!


'பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன்' என்னும் ஆங்கில திரைப்பட தொடர் மூலம் பிரபல்யமான நடிகர் தான்  ஜானி டெப்.இவர் ஆம்பர் ஹெர்ட் என்பவரைத் திருமணம் செய்திருந்தார். இந்த நிலையில்  தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக ஜானி டெப்பின் மீது ஆம்பர் வழக்குகத் தொடுத்திருந்தார்.

இந்த வழக்குகளில் ஜானி டெப் நிரபராதி எனவும், ஆம்பர் ஹெர்ட் தொடர்ந்த வழக்குகள் ஆதாரமற்றவை என கூறி கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்தது. 


மேலும், அவதூறு பரப்பும் வகையில் பொய்யாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தற்காக ஆம்பர் ஹெர்ட் தனது முன்னாள் கணவர் ஜானிக்கு இழப்பீடாக 78 கோடி ரூபாயும் (10 மில்லியன்), அபராதமாக 38 கோடி ரூபாயும் ( 5 மில்லியன்) என மொத்தம் 116 கோடி ரூபாய் (15 மில்லியன்) வழங்க வேண்டும் என கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.


 இந்த வழக்கு உலக அளவில் பேசுபொருளானது.இந்நிலையில், ஜானி டெப் உடனான அனைத்து வழக்குகளையும் ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை நஷ்ட ஈடாக வழங்கி முடித்துக் கொள்ளவுள்ளதாக ஆம்பர் ஹெர்ட் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் அந்த விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement