• Jul 24 2025

நடிகர் கமலேஷ் இப்படியெல்லாம் அசிங்கப்பட்டாரா...? அவரே மனம் திறந்து கூறினார்...

ammu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் கமலேஷ் ஒரு பேட்டியின் போது தான் பட்ட கஷ்டங்கள் குறித்து பேசி இருந்தார். அதில் அவர் இவ்வாறு கூறி இருந்தார். சினிமா பீல்ட்டிற்குள் வரவேண்டுமென்றால், யாரவது ஒரு நடிகரின் மகளாகவோ, மகனாகவோ இருந்தால் போதும்.


அப்படி யாரும் நடிகரின் பிள்ளையாக இருந்தால் சினிமா இண்டஸ்ட்ரி உங்களுக்காக காத்திருக்கும். ஆனால் சாதாரண நபராக இருந்தால் காத்திருந்து, காத்திருந்து, பத்து கம்பனி ஏறி, இறங்கி, அசிங்கப்பட்டு, இயக்குநரிற்காக பல மாதங்கள், வருடங்கள் காத்திருந்து இப்படி நிறைய அசிங்கப்பட்டு தான் வரணும்.


நான் இப்படி கஷ்டப்பட்டு வந்து படங்களில் நடித்திருந்தேன் ஆனாலும் அந்த படங்கள் பெருசாக பேசப்படவில்லை. அதன்பின்னர் தான் எனக்கு சீரியல் வாய்ப்பு வந்தது. முதல் சீரியலிலேயே ஹீரோ தான் கேட்டாங்க.


முதல் முதலில் நடிக்கும்போது 500 ரூபா வாங்கிவிட்டு நடித்தேன். என்னுடைய நடிப்பை பார்த்து தான் அடுத்த அடுத்த சீரியலிற்கு அழைத்தார்கள். நான் படித்து முடித்து விட்டு உடனே பேங்க்ல வேலை செய்தேன் மாதம் 18 ஆயிரம் சம்பளம் கிடைத்தது.


ஒரு சமயம் பேங்க்ல என்ன கேட்டாங்க உங்களுக்கு சினிமா சைட் வேணுமா? இந்த வேலை வேணுமா? என்று. அன்று நான் முடிவெடுத்தேன் சினிமா தான் வேணும் என்று. இன்றுவரை சினிமாவில் பயணிக்கிறேன்,அதேபோல் சாகும்வரை பயணிப்பேன் என்று கூறினார். 


வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்தது கொஞ்சம் கஷ்டம் தான். அந்த ஏக்கம் எனக்குள்ள இன்னும் இருக்கு. எனக்கு என்ன இல்ல? நல்ல உடல், நடிக்கிற திறமை எல்லாம் இருக்கு. அதனால் தான் 25 வருடமாக நான் நடித்துக்கொண்டு இருக்கிறேன். வெள்ளி திரையிலும் சாதிப்பேன் என்று நம்பிக்கை இருக்கு என்றும் கூறி இருந்தார்.


Advertisement

Advertisement