• Jul 25 2025

நடிகர் மகேஷ் பாபுவீட்டில் ஒன்று கூடிய திரையுலக பிரபலங்கள் - வெளியான ரகசியம்!

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் மகேஷ்பாபு ஆவார். அதுமட்டுமல்லாது இவர் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகராகவும் திகழ்கின்றார்.


சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படங்களைத் தேர்வு செய்து நடித்து இன்றுவரை வெற்றிக்  கதாநாயகனாகவே இவர் திகழ்ந்து வருகின்றார்.


தெலுங்கு மட்டும் அல்லாது ஹிந்தியை சேர்ந்த பிரபல முன்னணி கதாநாயகிகளுடன் இவர் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவின் வளர்ச்சிக்கு உறுதுணை புரிந்த நடிகர் மகேஷ்பாபு தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.

அந்தவகையில் மகேஷ்பாபு குறித்த சுவாரசியமான தகவல் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அது என்னவெனில் மகேஷ் பாபுவின் மகன் இன்றைய தினம் சிறப்பாக தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதுகுறித்து நடிகர் மகேஷ் பாபாவும் அவரது மனைவி நம்ராதாவும் தங்களது மகனை வாழ்த்தி வருகின்றனர். 


Advertisement

Advertisement