• Jul 24 2025

நடிகர் மனோபாலாவின் கடைசி நிமிடங்கள்! வெளியான வீடியோவால் கண்கலங்கிய ரசிகர்கள்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர், நடிகர், காமெடியன் என தொடர்ந்து தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்த மனோபாலா கடந்த வாரம் உடல்நலக்குறைவால் காலமானார்.

மேலும் அவருக்கு நடிகர் விஜய் உட்பட தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். அதன் பின்னர்  மனோபாலாவின் உடல் சென்னை வளசரவாக்கத்தில் இருக்கும் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

மனோபாலாவின் இறுதி நிமிடங்களை தற்போது அவரது youtube சேனலில் வெளியிட்டு இருக்கின்றனர். எனினும் அதில் மனோபாலாவின் மகன் அப்பாவை தேற்றுவதற்காக பாட்டு பாடுகிறார்.

Manobala's last moments என குறிப்பிட்டு அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கின்றனர். மனோபாலாவுக்கு ஒருவர் உணவு, தண்ணீர் ஊட்டி விடுகிறார்.

இதனை  பார்த்து ரசிகர்கள் கலக்கம் அடைந்து இருக்கின்றனர். 




Advertisement

Advertisement