• Jul 24 2025

நடிகர் மனோபாலாவுக்கு திடீரென நடந்த அறுவைச் சிகிச்சை-மருத்துவமனையில் இருந்து வெளியான புகைப்படம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் பிரபல நகைச்சுவை நடிகரான மனோபாலா, இயக்குநர்,  தயாரிப்பாளர்,  காமெடி நடிகர் என திரையுலகில் பன்முக திறன் கொண்டு விளங்குபவர் மனோ பாலா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சில்க் சுமிதா, நாகேஷ், அஜித், விஜய் பல்வேறு திரை நட்சத்திரங்களுடன் இணந்து நடித்துள்ளார். 

நயன்தார உள்ளிட்ட நடிகைகளுக்கு அப்பாவாகவும் நடித்துள்ளார். சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாதியில் நிகச்சியில் இருந்து வெளியேறினார்.இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


இதையடுத்து அவர் ஆஞ்சியோ சிகிச்சை பெற்று குணமாகி வரும் நிலையில் மனோபாலாவை நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ் முருகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.


மனோபாலா சிகிச்சை பெற்றதற்கான எந்தவித அறிகுறியும் இல்லாமல் பூச்சி முருகன் அவர்களிடம் உற்சாகமாக உரையாடியுள்ளார். இது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.சிகிச்சை முடிந்து மனோபாலா இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement