• Jul 24 2025

நம்பி கல்யாணம் பண்ணி ஏமாந்துட்டேன்... மனைவி குறித்த வேதனையை பகிர்ந்த நடிகர் மிர்ச்சி செந்தில்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று தான் 'சரவணன் மீனாட்சி'. இந்த சீரியலின் முதல் பாகத்தின் உடைய வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகமும் ஒளிபரப்பானது.


அந்தவகையில் இதில் முதல் சீசனில் மிர்ச்சி செந்தில் மற்றும் நடிகை ஸ்ரீஜா ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தனர். ரீல் ஜோடியாக நடித்த இவர் பின்பு ரியல் ஜோடியாக மாறினார்கள். அதாவது காதலராக இருந் இவர்கள் குடும்பத்தினரின் சம்மதத்துடன் 2014ல் திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணமாகி மனைவி ஸ்ரீஜா கர்ப்பமாக இருப்பதை செந்தில் சந்தோசத்துடன் வெளியிட்டார். பின்னர் குழந்தையும் பிறந்தது. தற்போது குடும்பத்துடன் மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வருகின்றார்.


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் மிர்ச்சி செந்தில் மனைவி குறித்த பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் பேசுகையில் "சரவணன் மீனாட்சி சீரியலில் ஸ்ரீஜா ரொம்ப அடக்கமான பொண்ணாக நடித்திருப்பார். நான் இவர் நிஜ வாழ்க்கையிலும் இப்படி அடக்கமாகத்தான் இருப்பார் என்று நம்பி ஏமாந்துவிட்டேன்" என்றார்.


மேலும் "ஸ்ரீஜா வீட்டில் ரொம்பவும் ஸ்ட்ரிக்ட். அவருக்கு என்ன பிடிக்குமோ அது மட்டும் தான் எங்க வீட்டில் நடக்கும். சீரியலில் உங்களுடன் கூட நடிக்கும் நடிகைகளின் உண்மையான கேரக்டர் தெரியாமல் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்" எனவும் மிர்ச்சி செந்தில் மிகவும் சுவாரஷ்யத்துடன் வருத்தமாக கூறியுள்ளார்.

Advertisement

Advertisement