• Jul 25 2025

கண்மணிக்கு இந்த குழந்தை தான் பிறக்கணும் என்று ஆசை- ஓபனாகப் பேசிய நடிகர் நவீன்- என்ன பெயர் வைப்பாங்க தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகளை தாண்டி தொகுப்பாளர்கள் மற்றும் செய்தி வாசிப்பாளர்களுக்கும் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த வகையில் தன்னுடைய அழகாலும் குறுகுறு பார்வையாலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் செய்திவாசிப்பாளரான கண்மணி.

ஜெயா டிவியில் தன்னுடைய நியூஸ் ரீடர் பயணத்தை துவங்கிய கண்மணி, பின்னர் நியூஸ்18, காவிரி போன்ற பல செய்தி நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். தற்போது இவர் சன் டிவியில் நியூஸ் ரீடர் ஆக பணியாற்றி வருகிறார். தற்போதைய ட்ரெண்ட் செட்டப்புக்கு ஏற்றாப்போல் பெண் ரசிகர்களை கவரும் விதத்தில், சேலை மற்றும் நகைகள் அணிந்து வருவது இவரிடம் உள்ள ஸ்பெஷல் என்று கூறலாம்.


இந்நிலையில் கண்மணி கடந்த ஆண்டு, தன்னுடைய காதலரும் இதயத்தை திருடாதே சீரியல் மூலம் பிரபலமான நடிகர் நவீனை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும், தொடர்ந்து செய்தி வாசிப்பாளராக இருந்து வரும் கண்மணி,  கர்ப்பமாக இருக்கும் தகவல் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோ ஒன்றின் மூலம் ரசிகர்களுக்கு தெரியவந்தது.

கண்மணிக்கு மிகவும் பிரமாண்டமாக அண்மையில் வளைகாப்பு நடந்தது. இந்த நிலையில் பிரபல சேனல் ஒன்றில் பேட்டியளித்த நவீன் கூறியதாவது எனக்கு எந்த பொண்ணு பிறந்தாலும் ஓகே தான் கண்மணிக்கு தான் பெண் குழந்தை பிறக்கணும் என்று ஆசை. எனக்கு நம்ம குழந்தை ஆரோக்கியமாக பிறந்தால் சரி என்று கூறினார்.


தொடர்ந்து பேசிய அவர் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கிறது என்றெல்லாம் இன்னும் முடிவு பண்ணல பெரியவங்க சொல்லுற படியே செய்வோம் என்று தான் இருக்கிறோம் குழந்தை கிடைக்கிறது எல்லாமே வரம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement