• Jul 24 2025

ஏ.ஆர் ரஹ்மான் கொடுத்த சர்ப்ரைஸால் மகிழ்ச்சியில் துள்ளி குதித்த நடிகர் பார்த்திபன்..! அவரே பதிவிட்ட வைரல் டுவீட் இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான இயக்குநர் எனப் பெயர் பெற்றவர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். புதிய பாதை படத்தின் மூலம் இயக்குநர் மற்றும் நடிகரான அறிமுகமானார்.

இவர், தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். சினிமாவில் புதிய முயற்சிகளை கையாளும் பார்த்திபன், வித்தியாசமான படங்களை இயக்கி பாராட்டுக்களைப் பெற்றார். 

இவர் இயக்கத்தில் வெளியான ஒத்த செருப்பு திரைப்படம் விருதுகளை வாங்கி குவித்தது. சமீபத்தில் இரவின் நிழல் என்ற படத்தையும் இயக்கியிருந்தார். படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது.

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவியது.  இந்த படம் உலகம் முழுவதும் 500+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.இந்த திரைப்படத்தில் இவர் நடித்து நல்ல விமர்சனங்களை பெற்று இருந்தார்.

இந்நிலையில் தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதாவது ''ரஹ்மான் சாரின் அன்பும் அவரின் இசையைப் போலவே தூய்மையானது.PS2-வில் என் காட்சியின் போது இசைக் கோர்ப்பில் ஒரு frame-ஐ எடுத்து அனுப்பினார்.குதுப்  மினார் உயரத்திற்கு குதூகளிப்பில் குதித்தேன்.என்பதாகும்.

இந்த டுவீட் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement