• Jul 24 2025

நடிகர் ரஜினிகாந்தின் முழு சொத்து மதிப்பு இத்தனை கோடியா?- வெளியாகிய முழு விபரம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் ரஜினிகாந்த். பல வருடங்களாக நடித்துவரும் ரஜினி இன்னமும் நம்பர் 1 என்ற இடத்தில்தான் இருக்கிறார். இவர் நடிக்கும் படங்களின் வியாபாரம் பல்லாயிரக்கணக்கான கோடியில் நடக்கக்கூடியவை.இவர் நடிப்பில் அடுத்ததாக ஜெயிலர் படம் வெளிவரவுள்ளது. 


நெல்சன் இயக்கும் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.இதற்கு அடுத்ததாக தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கவிருக்கும் லால் சலாம் படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த். இப்படத்தில் 7 நாட்கள் நடிக்க ரூ. 25 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம் என்றும் கூறப்படுகின்றது.


ஒரு பக்கம் இப்படத்தை இயக்கப்போவது TJ ஞானவேல் என்று கூறப்பட்டு வந்தாலும், அதுவும் உறுதியாக தெரியவில்லை. விரைவில் இதற்கான அறிவிப்பு படக்குழுவிடம் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.அத்தோடு கடந்த சில நாட்களுக்கு முதல் ரஜினிகாந்த் வீட்டிற்கு ஆன்மீக குரு குருதேவ் ஶ்ரீ ஶ்ரீ ரவி ஷங்கர் சென்று அங்கு விருந்தோம்பலையும் மேற்கொண்டார்.


இந்நிலையில், போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் வீட்டின் புகைப்படங்கள், அவர் பயன்படுத்தும் கார் மற்றும் அவருடைய சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.அதன்படி  ரஜினிகாந்தின் முழு சொத்து மதிப்பு ரூ. 410 முதல் ரூ. 450 கோடி வரை இருக்கும் என தகவல் தெரிவிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.







Advertisement

Advertisement