• Jul 26 2025

திருமணமாகி 11ஆண்டுகளுக்கு பின்... நடிகர் ராம் சரண் - உபாசனா தம்பதிக்கு முதல் குழந்தை பிறந்தாச்சு...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் ராம் சரண். இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்கிற பிரம்மாண்ட திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது. 


நடிகர் ராம் சரண் கடந்த 2012ஆம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது மனைவி உபாசனா கர்ப்பமாக இருக்கிறார் என ராம் சரண் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து நேற்று இரவு உபாசனா, ஜூபிலி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்தவகையில் இன்று காலை உபாசனாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அங்கு தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. 


இவ்வாறாக திருமணமாகி 11 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ள ராம்சரண் - உபாசனா ஜோடிக்கு சமூக வலைதளங்களில் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement