• Jul 24 2025

சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த சரிதாவை குண்டுச்சட்டி என்று கேலி பண்ணிய பயில்வான் ரங்கநாதன்- விளாசி வரும் நெட்டிசன்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தான் மாவீரன். இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகை சரிதா நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடித்திருந்தாலும் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், நடிகர் ரஜனிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் படத்தின் முதல் விமர்சனம் என வீடியோ வெளியிட்ட பயில்வான் ரங்கநாதன் நடிகை சரிதாவை குண்டுச்சட்டி என படு மோசமாக கிண்டலடித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ஒரு பக்கம் சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் லுக்கே தளபதி படத்தில் ரஜினியின் லுக்காக உருவாக்கப்பட்ட நிலையில், மேடையில் பேசும் போது நடிகை சரிதாவும் குட்டி ரஜினி என்றும் நெற்றிக்கண் படத்தின் ஷூட்டிங்கில் ரஜினி எப்படி இருந்தாரோ, அதே ஸ்பீடில் மாவீரன் படத்தின் ஷூட்டிங்கில் சிவகார்த்திகேயன் இருந்தார் என சரிதா பேசிய பேச்சுக்கு பயில்வான் ரங்கநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


படத்தில் வாய்ப்பு கிடைத்ததற்காக பாராட்டலாம். ஆனால், அதற்காக சூப்பர்ஸ்டார் உடன் இளம் நடிகர்களை ஒப்பிட்டு பேசுவது ரொம்பவே தவறான விஷயம் நான் நடிகை சரிதாவை அவர் சொன்ன அந்த வார்த்தைக்காக கண்டிக்கிறேன் என்றே அந்த வீடியோவில் பேசியுள்ளார். இதனால் பயில்வானை ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement