• Jul 25 2025

உடலில் சேற்றை பூசிக்கொண்டு...குளியல் போட்ட நடிகர் ஸ்ரீகாந்த் மனைவி வந்தனா! தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி தற்போது வெளிநாட்டுக்கு தோழிகளுடன் வெகேஷன் சென்றுள்ள நிலையில், அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்  இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

ஜெயம் ரவி - ஆர்த்தி, குஷ்பூ  - சுந்தர் சி, போன்ற பிரபலங்களின் வரிசையில் எப்போதுமே இளம் காதலர்கள் போல் யங் லுக்கில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் ஸ்ரீகாந்த் மற்றும் அவரின் மனைவி வந்தனா.


வந்தனா தன்னுடைய மகளுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டால் கூட, அவர் இவரின் தங்கை போலவே தெரிவதாக கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.


இவர்களின் இந்த குதூகல இளமைக்கு முக்கிய காரணம், சரியான உணவு பழக்கம், உடல்பயிற்சி, மற்றும் தங்களை சுறுசுறுப்பாக வைத்து கொள்வதோடு, சந்தோஷமாகவும் வைத்து கொள்கிறார்கள்.


அத்தோடு  அடிக்கடி வெளிநாடுகளுக்கு வெகேஷன் சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ள, ஸ்ரீகாந்த் - வந்தனா ஜோடி இந்த முறை ஜோடான் சென்றுள்ளனர்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவருடன் சில புகைப்படங்களை வந்தனா வெளியிட்ட நிலையில், தற்போது தோழிகளுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.


ஜோர்டானில் உள்ள கடற்கரையில், சேற்றை கழுத்து கை மற்றும் கால்களில் பூசிக்கொண்டு குளியல் போட்டுள்ளார்.மேலும்  இப்படி சேற்றில் குளிப்பதால் கனிம சத்துக்கள் கிடைப்பாக தெரிவித்துள்ளார்.


தோழிகளுடன் வந்தனா சென்றுள்ள இந்த வெகேஷன் ட்ரிப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.


ஒரு சில நடிகர் நடிகைகளை பார்த்து... ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை கேட்க்கும் கேள்விகளில் ஒன்று உங்களுக்கு வயசே ஆகாதா என்பது தான். அந்த லிஸ்டில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் ஸ்ரீகாந்த். 

Advertisement

Advertisement