• Jul 25 2025

சுந்தரிக்கு வாழ்த்து கூறிய நடிகர் சூரி-இது தான் காரணமா..வெளியானது வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்த் தொலைக்காட்சிகளில் மக்களைப் பெரிதும் கவர்ந்த தொலைக்காட்சியாக இருப்பது சன் தொலைக்காட்சியாகும்.இதில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதும் தெரிந்ததே. அத்தோடு தற்போது TRP உச்சத்தில் இருக்கும் ஒரே தொலைக்காட்சி சன் டிவி தான்.

சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சுந்தரி சீரியல் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த சீரியல்கள் லிஸ்டில் முதலிடத்தில் இருக்கிறது.இந்த சீரியலுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் ஆதரவு அதிகம். இதில் மோகன், ராதா, சுஹாசினி நடித்த கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் கதை தான் சுந்தரி சீரியலின் ஒன்லைன். அதே நேரம் திரைக்கதையில் சில பல சுவாரசியங்களை சேர்த்து இயக்குநர் கதையை நகர்த்தி வருகிறார்.

இந்நிலையில் டஸ்கி நிறத்தில், கஷ்டப்பட்டு படித்து கலெக்டர் ஆக வேண்டுமென்ற லட்சியத்துடன் இருக்கும் சுந்தரிக்கு,  கார்த்திக் உடன் திருமணம் நடக்கிறது. ஆனால் கார்த்திக்கு இதில் துளியும் விருப்பமில்லை. பெற்றோர்கள் வற்புறுத்தலால் கல்யாணம் நடக்க, சுந்தரியை விட்டு பிரிந்து வெளியூர் செல்கிறார். அங்கு அனு என்ற பணக்கார வீட்டு அழகான பெண்ணை பார்த்து கல்யாணமும் செய்து கொள்கிறார்.

இவ்வாறுஇருக்கையில் இந்த விசயம் சுந்தரிக்கு தெரியவந்துவிட்டது.ஆனால் அனுவிற்கு தெரிவில்லை.இவ்வாறுஇருக்கையில்  திரைக்கதை ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த ட்விஸ்ட் தற்போது நிகழ்ந்து வருகின்றது.

இந்நிலையில் 500 எபிசோட்களை எட்டி உள்ளது சுந்தரி.இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் முகமாக சூரி தனது வாழ்த்துக்களை கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ..



Advertisement

Advertisement