• Jul 24 2025

தனது 42வது படத்திற்காக வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் நடிகர் சூர்யா-தீயாய்ப்பரவி வரும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் கமர்சியல் மற்றும் ஆக்சன் படங்களை தேர்வு செய்து நடிக்கும் ஹீரோக்களை விட, இவருடைய கதை தேர்வு சமீப காலமாக மிகவும் வித்தியாசமாக இருந்து வருகிறது.இதனால் கதைக்கும், கதாபாத்திரத்திற்கும், முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிப்பதோடு தயாரித்தும் வருகிறார். 

சமீபத்தில் இயக்குநர் பாலா இயக்கத்தில், நடித்து வந்த 'வணங்கான்' படத்தில் நடித்து வந்த சூர்யா, பின்னர் பாலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்தில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. மேலும் இந்த தகவலை இயக்குநர் பாலாவும், சூரியாவும் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் அறிக்கை வெளியிட்டு உறுதிப்படுத்தி இருந்தனர்.


இதனை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 42 வது படத்தில் சூர்யா முழு கவனம் செலுத்தி வருகிறார். இப்படம் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று கதையாக உருவாகி வருகிறது.இப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதத்திற்கும் மேல் முடிவடைந்துவிட்ட நிலையில், மீதமுள்ள காட்சிகளும் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. 


இந்நிலையில் தற்போது சூர்யா 42 படத்திற்காக சூர்யா வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.ரசிகர்கள் ஆச்சரியத்துடன் அந்த வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள். மேலும் இந்த படத்தில் நடித்து முடித்த பின்னர், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பில் சூர்யா கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement

Advertisement