• Jul 25 2025

நடிகர் விஜய் கல்வி விருது விழாவிற்காக இத்தனை கோடி செலவு செய்திருக்கின்றாரா?- அரங்கத்தின் வாடகை மட்டும் எவ்வளவு தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழகத்தில் 10 மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வுகளில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கினார். இந்த நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெற்றது.

இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவில் சுமார் ஆயிரத்து 500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கும் நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார்.


விழாவை ஒட்டி, மாணவர்கள் அனைவரும் பெற்றோர்களுடன் நேற்று சென்னை அருகே வந்து தங்க வைக்கப்பட்ட நிலையில், இன்று காலை உணவை முடித்துக் கொண்டு வண்டலூர், கேளம்பாக்கம் வழியாக வந்து நீலாங்கரையை சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று காலை 7:30 மணி முதலே மாணவர்களும் பெற்றோர்களும் மண்டபத்திற்கு வருகை தரத்தொடங்கியுள்ளனர். விஜய் 10:30 மணிக்கு மேல் வந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வருது நிகழ்ச்சிக்காக விஜய் 2 கோடி செலவு செய்ததாகவும் அதில் அரங்கத்தின் வாடகை மட்டும் 40 லட்சம் என்றும் காலை,மதிய உணவு மற்றும் வெளியூரில் இருந்து வந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்குவதற்கான மண்டப செலவு அனைத்தையும் விஜய் ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement