• Sep 10 2025

லியோ வெற்றி விழா... ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகர் விஜய்... குழப்பத்தில் ரசிகர்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் உலகளாவிய ரீதியில் நல்ல வசூல் செய்து வருகிறது. இதனால் அந்த வெற்றியை கொண்டாட லியோ வெற்றி விழா நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


நாளை நேரு விளையாட்டரங்கில் இந்த நிகழ்வானது நடைபெறவுள்ளது.இந்நிலையில் காவல் துறையினரால் பல்வேறு நிபந்தனைகள் படக்குழுவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த விழாவிற்கு பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதிலும் ரசிகர் மன்ற அட்டை மற்றும் ஆதார் கார்டு வைத்திருந்தால் அனுமதிக்க படுவார்கள் என்றும் வெளியாகியுள்ளது.


ரசிகர்களுக்கு நாளை மாலை 4 மணிமுதல் அனுமதி வழங்க படுகிறது. மாலை 6 மணிமுதல் 11 மணிவரை லியோ வெற்றி விழா நடைபெறயுள்ளது. லியோ வெற்றி விழாவிற்கு வருகை தரும் ரசிகர்கள் சாலையில் வாகனங்கள் நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் அறிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement