• Jul 23 2025

அம்மா இருந்திருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்க ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களிலும் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருபவர் தான் விஜயகுமார். இவருக்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என மூன்று மகள்கள் இருக்கின்றனர்.இவர்கள் மூவருமே சினிமாவில் ஜொலித்தவர்கள். வனிதா தற்பொழுது மீண்டும் ரி என்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றார்.

இதில் ப்ரீத்தாவின் கணவர் தான் இயக்குநர் ஹரி. இவர் இறுதியாக தனது மச்சான் அருண் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த யானை படத்தை இயக்கி இருந்தார்.இந்த நிலையில் இவரது குடும்பம் இணைந்து தற்பொழுது மீண்டும் சூப்பர் குட் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளனர்.


இந்த நிலையில் இது குறித்த நடிகை ப்ரீத்தா நன்றி சொல்லி பேசியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது 40 வருடத்திற்கு பிறகு மீண்டும் இந்த ஸ்ரூடியோவை ஆரம்பித்துள்ளோம். ரொம்ப சந்தோஷமாக இருக்கு.இந்த நேரத்தில எங்க அம்மாவை ரொம்ப மிஸ் பண்றேன். அவங்க இருந்திருந்தால் ரொம்ப சந்தோசப்பட்டிருப்பார்.


என்னுடைய கணவர் அவ்வளவு காட் வேர்க் பண்ணி இந்த ஸ்ரூடியோவை ஆரம்பித்துள்ளார். ரசிகர்கள் உங்களுடைய சர்ப்போட் எப்போதும் என்னுடைய குடும்பத்தினருக்கு இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் இவரது சகோதரி ஸ்ரீதேவியும் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement