• Jul 24 2025

திடீரென காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்புப் பூஜைகள் செய்த நடிகர் விஜய்யின் தாயார்- அடடே இது தான் விஷேசமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர்  தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் உருவாகியுள்ள வாரி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ரசிர்கள் செம குஷியில் உள்ளனர்.

இப்படத்தை தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்குவதோடு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரித்து வருகின்றார். அத்தோடு இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.


இந்த நிலையில் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் நேற்றைய தினம் உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்து உலக மக்கள் நன்மை பெற வேண்டியும், விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டியும் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்.


காமாட்சி அம்மனை தரிசனம் செய்த பின்னர் கோவில் நிர்வாகம் அளித்த பிரசாதங்களை பெற்றுக் கொண்டு ஷோபா சந்திரசேகர் சென்னைக்கு திரும்பி சென்றார்.பல ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, பொங்கல் பண்டிகைக்கு, அஜித்தின் துணிவு திரைப்படமும், லிஜயின் வாரிசும் ஒரே நேரத்தில் ரிலீசாகிறது. 

இதனால் தல, தளபதி ரசிகர்கள் ஏக குஷியில் உள்ளனர். பொங்கலுக்கு ரிலீசாகும் தமிழ் சினிமாவின் இரண்டு நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களும் வெற்றி பெற வேண்டி, அஜித், விஜய் ரசிகர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஏற்கனவே சிறப்பு பூஜை நடத்தி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement