• Jul 25 2025

டூப் போடாமல் தாவிக்குதித்த நடிகர் - வலது கை முறிந்த சோகம்- ஷுட்டிங்கில் ஏற்பட்ட பரபரப்பு

stella / 2 years ago

Advertisement

Listen News!

சுற்றுலாத்தலமான சேலம் மாவட்டம் ஏற்காட்டில் திரைப்படம் சூட்டிங் தளமாக மாறி வருகிறது. அந்த வகையில் நடிகர் அபி சரவணன் என்ற விஜய் விஷ்வா நடிக்கும் திரைப்படத்தின் காட்சிகள் ஏற்காடு பகுதியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் படப்பிடிப்பின் போது இருசக்கர வாகனத்தின் மீது ஏறி குதிப்பது போன்ற காட்சிகள் படமாக்கபட்டது.அப்போது பைக்கில் இருந்து குதிக்கும் போது கீழே விழுந்ததில் நடிகர் அபி சரவணனின் வலது கை முறிந்தது. 


இதனை அடுத்து வலியால் துடித்த அவர் சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.


டூரிங் டாக்கீஸ் சாகசம், கொம்பு வச்ச சிங்கம்டா உள்ளிட்ட சில படங்களில் அபி சரவணன் ஹீரோவாகவும் குணச்சித்திர வேடங்களில் நடித்துவருகிறார். தற்போது தனது பெயரை விஜய் விஷ்வா என மாற்றிக்கொண்டு திரைப்டங்களில் நடித்துவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement