• Jul 24 2025

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நியூ என்ட்ரீ கொடுக்கும் நடிகர் - யார் தெரியுமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

கூட்டுக் குடும்பம், அண்ணன்-தம்பிகள் பாசம் என எடுத்துறைக்கும் சீரியலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இப்போது அண்ணன்-தம்பிகள் பிரிந்துவிட்டனர், அனைவரும் பழையபடி எப்போது ஒன்றிணைவார்கள் என்பது தெரியவில்லை.

கதைக்களத்திலும் தனம் தனக்கு ஏற்பட்ட நோய் குறித்து வீட்டில் அறிவிக்காமல் மற்ற கடமைகளை செய்ய வேண்டும் என்று அதில் கவனம் செலுத்தி வருகிறார்.

அடுத்தடுத்த கதைக்களத்தில் என்ன நடக்கும் என்பது தெரியவில்லை, தற்போது ஒரு புதிய தகவல் ஒன்று வந்துள்ளது.

அதாவது தனத்திற்கு இருக்கும் நோய் குறித்து வீட்டில் அனைவருக்கும் தெரிய வர அனைவரும் அவரது சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறார்களாம்.

தனத்திற்கு மருத்துவ சிகிச்சை செய்ய மருத்துவராக பாரதி கண்ணம்மா தொடரில் டாக்டராக நடித்த அருண் இதில் நடிக்க வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. 


Advertisement

Advertisement