• Jul 25 2025

நள்ளிரவு 2.30 மணிக்கு நடிகையுடன் ஷாருக்கான் வீட்டிற்கு சென்ற நடிகர்-நடந்தது என்ன...?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 இரவு 2.30 மணிக்கு நடிகையுடன் ஷாருக்கான் வீட்டிற்கு சென்ற தனக்கு நடந்த விஷயத்தை மறக்க முடியாது கூறியுள்ளார் நடிகர் ரோஹித் ராய்.

பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் இன்று தனது 57வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து கூறி வருகிறார்கள். இதனால் #SRKDay #Shahrukhkhan, #mannat ஆகிய ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. நள்ளிரவில் தன் பங்களாவான மன்னத் முன்பு கூடியிருந்த ரசிகர்களை பால்கனியில் இருந்து பார்த்து கையசைத்தார் ஷாருக்கான். பிறந்தநாளில் ஷாருக்கானை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.

ஷாருக்கான் பற்றி நடிகர் ரோஹித் ராய் தெரிவித்திருப்பதாவது, நான் சுவாபிமான் ஷோ செய்த பின்னர் மக்கள் என்னை ஷாருக்கானுடன் ஒப்பிட்டார்கள். அத்தோடு அது எனக்கு சந்தோஷமாக இருந்தது. நான் அடுத்த ஷாருக்கான் ஆவதற்கான அனைத்து தகுதியும் இருப்பதாக எழுதினார்கள். ஸ்வாபிமான் மூலம் நான் ஒரே இரவில் பிரபலமாகிவிட்டேன் என்று கூறினார்.


ரோஹித் ராய் மேலும் தெரிவித்ததாவது, நான் ஷாருக்கானை ஓரங்கட்ட முடியாது என்பது எனக்கு தெரியும். நான் அவரை சந்தித்து பேசியபோது அவரின் தன்னம்பிக்கை தான் என்னை வெகுவாக கவர்ந்தது. அந்த தன்னம்பிக்கையை சிலர் தலைக்கனம் என்று தவறாக புரிந்து கொள்கிறார்கள் என்று கூறினார்.

20 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியை சேர்ந்த நடிகை ஒருவர் என்னுடன் சேர்ந்து படத்தில் நடித்தார். அவர் ஷாருக்கானுக்கு பழக்கமானவர். அதனால் ஷாருக்கான் வீட்டில் தங்கியிருந்தார். ஒரு நாள் இரவு 2.30 மணிக்கு அவரை ஷாருக்கான் வீட்டில் விடச் சென்றேன். அவர் பத்திரமாக செல்ல வேண்டுமென்பதால் வீட்டு வாசல் வரை சென்றேன் என்றார் ரோஹித் ராய்.


கௌரி கான் தான் கதவை திறந்தார். ஷாருக்கானும் அவருடன் இருந்தார். என்னை பார்த்ததும் உள்ளே வாங்க என்றார் ஷாருக்கான். ரொம்ப லேட்டாகிவிட்டதே என்றேன்.மேலும்  அந்த நேரத்தில் கூட ஷாருக்கானும், மனைவியும் என்னை அன்புடன் வரவேற்றனர். சொல்லாமல் அந்த நேரத்தில் யாராவது என் வீட்டிற்கு வந்திருந்தால் நான் கோபப்பட்டிருப்பேன். அந்த இரவை மறக்கவே மாட்டேன் என்று ரோஹித் ராய் தெரிவித்தார்.






Advertisement

Advertisement