• Jul 25 2025

நடிகர் யோகிபாபுவுக்கு இந்த கிரிக்கெட் வீரர் தான் ரொம்ப பிடிக்குமாம்..! யார் தெரியுமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

கிரிக்கெட் வீரர் நடராஜன், தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் உருவாக்கியுள்ள கிரிக்கெட் மைதானத்தை கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார்.

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்தவர், கிரிக்கெட் வீரர் டி.நடராஜன். இவர், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் சிறப்பாக விளையாடி கவனம் ஈர்த்தவர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய கிரிக்கெட் அணியில் வலைப் பயிற்சி பந்துவீச்சாளராக இடம்பெற்றார். நடராஜன். அப்போது அந்த தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக விலகியதைத் தொடர்ந்து, அதே தொடரில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியில் இடம்பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் . 

கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள கிராமபுற இளைஞர்களை அதிகம் உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் நடராஜன். இதற்காக  தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தில் சொந்தமாக கிரிக்கெட் மைதானம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் யோகிபாபு, புகழ், சென்னை சூப்பர் கிங்ஸ் சிஇஒ விஸ்வநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத் தலைவர் அசோக் சிகாமணி, செயலாளர் பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது யோகி பாபு கூறுகையில் , இத பார்த்ததும் நம்மளும் ஒரு கிரௌண்ட கட்டலாம் என தோணிச்சு .இப்படி கிரௌண்ட அமைத்து நடராஜ்  போல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கலாம்.இது கடவுள் ஆரீர்வாதத்தால் நடக்கோணும்.எனக்கு எல்லா கிரிக்கெட் பிளேயர்ஸும் பிடிக்கும் அதில ரொம்ப வீரேந்திர சேவாக் அவரை பிடிக்கும்.என கூறியுள்ளார்.

மேலும் நட்ராஜ் தம்பிய ரொம்ப பிடிக்கும் கஸ்டப்பட்டு வந்திருக்கிறார் .அதனால அவரையும்  பிடிக்கும் .நான் அடுத்ததாக கிரிக்கெட் படம் தான் பண்ணுறேன் சீக்கிரமா அந்த திரைப்படம் வெளிவரும் பொம்மை நாயகி இயக்குநர் தான் இதனை இயக்குகிறார்.என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement