• Jul 26 2025

அடுத்தடுத்து உண்மைகளை உடைக்கும் நடிகர்கள்...11 மணிக்கு அழைத்து விட்டு நடிகை கூறிய விஷயம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகில் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகளவில் இருப்பதாக நடிகைகள் பலர் தொடர்ந்து புகார் கொடுத்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே இதுகுறித்து மீடூவில் வெளிப்படையாக பேசி வருகின்றனர். 


ஆனால் சமீப காலமாக நடிகர்களும் இதுகுறித்து மனம்திறந்து பேசி வருகின்றனர். அத்தோடு கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் ரவி கிஷான் தனக்கு நடிகை ஒருவர் இரவு அழைத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.


இவ்வாறுஇருக்கையில், தற்போது மேலும் ஒரு பாலிவுட் நடிகர் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து மனம்திறந்து பேசி உள்ளார். பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகரான ஷிவ தகாரே என்பவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. எனினும் தற்போது இவர் பாலிவுட் படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் தான் சந்தித்த கசப்பான அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார்.


அதன்படி நடிகர் ஷிவ தகாரேவை காஸ்டிங் இயக்குநர் ஒருவர் இரவு 11 மணிக்கு ஆடிசனுக்கு வருமாறு அழைத்தாராம்.எனினும்  இதையடுத்து எங்கு வர வேண்டும் என கேட்டதற்கு மசாஜ் செண்டருக்கு வருமாறு கூறினாராம். அத்தோடு 11 மணிக்கு மசாஜ் செண்டருக்கு அழைத்ததை அடுத்து உஷாரான நடிகர் ஷிவ தகாரே, அங்கு செல்ல மறுத்துவிட்டாராம். இதுதவிர பெண் ஒருவர் தன்னை இரவு நேரத்தில் வீட்டுக்கு வருமாறு அழைத்ததாகவும் ஷிவ தகாரே கூறியுள்ளார்.


மேலும் அந்த பெண்ணின் அழைப்பை நிராகரித்தபோது, தன்னிடம் இரவு வந்தவர்கள் எல்லாம் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள் என்றும், நீ வரவில்லை என்றால் உனக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்காதபடி செய்துவிடுவேன் எனவும் அந்த பெண் மிரட்டியதாக ஷிவ தகாரே கூறியுள்ளார். இருப்பினும் அந்த பெண் யார், அவர் ஒரு நடிகையா அல்லது இயக்குனரா என்கிற தகவாலை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.

Advertisement

Advertisement